Canterbury இல் கால்நடைகளை வேட்டையாட thermal imaging கருவி (ஒரு பொருளின் உருவத்தை அல்லது இருப்பிடத்தைக் கண்டறிய அதன் மூலம் கொடுக்கப்பட்ட வெப்பத்தைப் பயன்படுத்தும் நுட்பக் கருவி) பயன்படுத்திய ஒருவர்‌ கைது செய்யப்பட்டுள்ளார்.

Darfield அருகே கால்நடைகளை சுட்டுக் கொல்ல பொது சாலையில் இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன என்று மூத்த கான்ஸ்டபிள் ஹமிஷ் கேர்ட் கூறினார்.

70 வயதான அந்த நபர், விலங்குகளை தவறாக நடத்துதல், கால்நடைகளை திருடியது ஆகிய குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக வேட்டையாடுவது இப்பகுதியில் உள்ள மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது மற்றும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கெய்ர்ட் கூறினார்.

இது வேட்டையாடுபவர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், அதிகபட்சமாக 100,000 டொலர்கள் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் கிராமப்புற மக்கள் உங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேர்ட் நினைவுபடுத்தினார்.

"உங்கள் அண்டை வீட்டாருடன் தொடர்பில் இருக்குமாறும், வழக்கத்திற்கு மாறான எதையும் நீங்கள் கண்டால் ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துமாறும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பல திருட்டுகள் சந்தர்ப்பவாத குற்றவாளிகளால் செய்யப்படுகின்றன."

காவல்துறை இத்தகைய குற்றங்கள் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ‌சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டால் உடனடியாக 111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.