இந்த மாத தொடக்கத்தில் ஆக்லாந்தின் Manukau துறைமுகத்தில் ஐவர் பயணித்த படகு கவிழ்ந்து காணாமல் போன 10 வயது சிறுவனை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர், தன்னார்வத் தொண்டர்கள், கடலோர காவல்படை மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை இரண்டு வாரங்களுக்கும் மேலாக குறித்த சிறுவனை தேடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

"இந்த முயற்சிகள் இருந்தபோதிலும் எங்களால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

Clarks கடற்கரைக்கு அருகே அவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறித்த சிறுவனின் தாயார் ஜெம்மா ஃபெர்ரெகல் நீரில் மூழ்கி இறந்தார் மேலும் மூன்று பேர் உயிர் தப்பினர்.

கடலோர காவல்படையின் வடக்கு பிராந்திய மேலாளர் ஜானி பன்னிஸ்டர் கூறுகையில்...

பல தன்னார்வலர்கள் இந்த தேடலில் இணைந்தனர்.

இது சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு சோகம் என்றும், தனது இரங்கலைத் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

படகில் செல்லும் எவருக்கும் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும், எப்போதும் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொள்வதும், வெளியே செல்வதற்கு முன் வானிலையை சரிபார்ப்பதும் அவசியம் என்பதை மக்களுக்கு நினைவூட்ட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.