ஆசிரியைகளுக்கென விதிக்கப்பட்டுள்ள சாரி மற்றும் ஒசாரிக்கு பதிலாக கெசுவல் (Casual)  இலகு ஆடைகளை அணிந்து செல்ல அனுமதிக்குமாறு கோறி ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து வருகின்ற நிலையில், இன்றைய (21) தினம் நாட்டின் பல்வேறு பகுதி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் கெசுவல் உடையணிந்து பாடசாலை சென்றுள்ளமை தொடர்பில் முகநூலில் படங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

வெளிநாடுகள் போன்று அவரவரின் விருப்பத்திற்கேற்ப, வசதிக்கேற்ப ஆடைகளை அணிந்து பாடசாலை வருவதற்கு அனுமதிக்குமாறு இவர்களது போராட்டம் இன்று முதல் செயன்முறையாக ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.