சமீபத்தில் மறைந்த ராணி எலிசெபெத்தின் கரடி பொம்மைகளை குழந்தைகளுக்காக வழங்க விருக்கிறது பக்கிங்காம் அரண்மனை.

இதனால் ராணி எலிசபெத் வைத்திருந்த கரடி பொம்மைகள் அரண்மனையை விட்டு காலி செய்து செல்வதை போல படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வயது மூப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்த இங்கிலாந்து ராணிக்கு அவரது செல்ல கரடி பொம்மைகள் மௌன அஞ்சலி செலுத்தும் வகையிலும், அரண்மனையை சுற்றி பார்ப்பதை போன்ற புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இங்கிலாந்தில் மிக நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் எலிசபெத்.

1952 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 70 ஆண்டுகள் இங்கிலாந்து ராணியாக பதவியில் இருந்தார் எலிசபெத். தனது 96 வயதில் கடந்த செப்டம்பர் மாதம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் ராணி எலிசபெத்

ராணி எலிசபெத், மிகப்பெரிய நகைச்சுவையாளர். அவருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். இங்கிலாந்து ராணியாக பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு விழா நடத்தப்பட்டது.

அந்த விழாவின் போது பேடிங்கடன் கரடியுடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் விருந்தில், ராணி எலிசபெத் பங்கேற்பது போன்று படமாக்கப்பட்டது. இந்த விருந்தின்போது, கரடி தான் அணிந்திருந்த சிவப்பு நிறத் தொப்பியைக் கழற்றி, தனது விருப்ப உணவான மர்மலேட் சாண்ட்விச்சை எடுத்தது.

எப்போதும், அவசரத் தேவைக்காக இந்த இடத்தில் ஒரு சாண்ட்விச் வைப்பது வழக்கம் எனவும் கரடி தெரிவித்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், ராணி எலிசபெத் தனது கருப்பு நிற ஹேண்ட்பேக்கில் இருந்து, ஒரு சாண்ட்விச்சை எடுத்து, தானும் வைத்திருப்பதாக கரடிக்கு நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

அதன் நினைவாக ராணி எலிசபெத் உயிரிழந்த போது அவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமான பேடிங்கடன் கரடி பொம்மைகள் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்கும் ராயல் பூங்காவில் வைத்தனர்.

அந்த கரடி பொம்மைகள் அரண்மனையில் ராணி உலவும் பகுதிகளில் வைக்கப்பட்டன.

அந்தப்பொம்மைகள் லண்டனில் இருக்கும் பர்ணான்டோஸ் நர்சரிப் பள்ளிக்கு அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளதாக ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இதனால் இறுதியாக அந்த கரடிகள் அரண்மனையை சுற்றி பார்ப்பதை போன்ற படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.