நியூசிலாந்தில் வார இறுதியில் மூன்று சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி சனிக்கிழமை Whangārei இல் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் இறந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்து மாலை 4.10 மணியளவில் மாநில நெடுஞ்சாலை 1 இல் Kauri என்ற இடத்தில் உள்ள Saleyards சாலைக்கும் Richards சாலைக்கும் இடையில் நடந்தது.

இதனையடுத்து இரவு 9.10 மணியளவில் Taupō இல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இது Centennial Drive இற்கு வடக்கே, மாநில நெடுஞ்சாலை 1 இன் கிழக்கு Taupō Arterial என்ற இடத்தில் நடந்தது.

மேலும் சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு, Pukekohe விற்கு அருகிலுள்ள Mauku வில் Union சாலையில் பேருந்து மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் இறந்தார்.

இதனையடுத்து கிறிஸ்ட்சர்ச்சில், இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் Bromley என்ற இடத்தில் ஒரு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வார இறுதியில் இடம்பெற்ற சாலை விபத்துக்களில் 6 மரணங்கள் பதிவாகியுள்ளன.