Taranaki யை சூறாவளி தாக்கியதால் மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்து பல வீடுகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. மேலும் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.

குறித்த சூறாவளி காலை 9.45 மணியளவில் New Plymouth இற்கு வடக்கே Motunui என்ற இடத்தை தாக்கியது.

மேல் North Island இன் சில பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகளை MetService வெளியிட்ட அதே நேரத்தில் சூறாவளி ஏற்பட்டது.

சூறாவளியின் காரணமாக சில மின்கம்பிகள் வீழ்ந்து விட்டதாகவும், ஸ்லேட் கூரை இரும்புகள் தளர்ந்துவிட்டதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் Motunui வில் உள்ள Turangi சாலையில் வீடு வீடாகச் சென்று நலன்புரிச் சோதனைகளை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

Waitara பகுதியில் உள்ள 37 வீடுகளில் மின்சாரம் இல்லை என்றும், இன்று மாலை 6 மணி வரை அதை மீட்டெடுக்க முடியாது என்றும் PowerCo தெரிவித்துள்ளது.

வட தீவின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் MetService தெரிவித்துள்ளது.

Bay of Plenty, வைகாடோ மற்றும் Coromandel Peninsula வை இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் MetService கூறுகிறது.

ஆலங்கட்டி மழையால் பயிர்கள், கண்ணாடி வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடையக்கூடும் என்றும், காற்றினால் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் சேதமடையலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரவு 7 மணிக்கு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றிரவு ஆக்லாந்து பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது, இதனால் மரங்கள் விழுந்து, வெள்ளம் மற்றும் சொத்து சேதங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.