பாங்காக்கில் இடம்பெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது.

இந்த இருதரப்பு சந்திப்பின்  பெரும்பகுதியில் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவுவது பற்றி விவாதித்தனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தை 20 நிமிடங்களுக்கு திட்டமிடப்பட்டது, ஆனால் இரு தலைவர்களும் பல விடயங்கள் குறித்து விவாதித்ததால் 50 நிமிடங்களுக்கு இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஆடர்ன் சீனாவின் அண்டை நாடான வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல் குறித்து சீன அதிபரின் பார்வை என்ன என்பதை கூற மறுத்துவிட்டார்.

ஆனால் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இழப்பது யாருக்கும் விருப்பமில்லை என்று அனைத்து ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நாடுகளுக்கும் ஒரே கருத்தைப் அவர் பகிர்ந்து கொண்டதாக பிரதமர் ஆடர்ன் கூறினார்.

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு உலகத் தலைவர்கள் மற்றும் பிரதமர் ஆர்டர்ன் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.