வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனரா என்று அவர்களை தொடர்பு கொள்ள‌ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு சிறுவன் தான் ஒரு செவ்வாய் கிரகவாசி என்று கூறி வருகிறான்.

டெய்லி ஸ்டாரின் அறிக்கையின்படி...

வோல்கோகிராட்டைச் சேர்ந்த போரிஸ் கிப்ரியானோவிச் என்ற ரஷ்ய சிறுவன், தான் ஒரு வேற்று கிரக உயிரினம் என்று கூறுகிறான்.

அணுஆயுத அழிவிலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்திருப்பதாகவும்  சொல்லிக்கொள்கிறான்.

விண்மீன்களுக்கு இடையேயான பயணங்களை மேற்கொள்ளக்கூடியவர்களுடன் முந்தைய வாழ்க்கையை மேற்கொண்டதாக போரிஸ் கூறுகிறான்.

மனித இனத்தை அழியாமல் பாதுகாக்க பூமிக்கு அனுப்பப்பட்ட இண்டிகோ குழந்தைகளில் நானும் ஒருவன்.

பல ஆண்டுகளாக பூமிக்கு பல முறை விஜயம் வந்து போவதாகவும் அச்சிறுவன் கூறியுள்ளான்.

போரிஸின் தாயும் அவரது மகன் மார்ஸிலிருந்து வந்திருப்பதாகக் கூறுகிறார்.

மருத்துவரான அவர், " 1996ம் ஆண்டு போரிஸ் பிறக்கும் போது எனக்கு எந்த வலியும் ஏற்படவில்லை. அவன் பிறந்ததுமே பெரிய மனிதர்களைப் போல என்னை உற்றுப் பார்த்தான். ஒரு மருத்துவராக, பிறந்த குழந்தைகளுக்கு உற்று பார்க்கும் திறன் இருக்காது என எனக்குத் தெரியும்" என்று போரிஸின் பிறப்புக் குறித்து கூறுகிறார்.

மேலும் போரிஸ் வளர வளர அவனிடம் பல தனித்துவங்களைக் கவனித்ததாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக அவனுக்கு 1 வயது இருக்கும் போதே அவர் செய்தி தாள் தலைப்புகளைப் படித்தார் எனவும், குழந்தையாக இருக்கும் போது எந்த உள்வாங்களும் இல்லாமல் செவ்வாய் கிரகம் குறித்து பல விஷயங்களைப் பேசுவார் என்றும் கூறியிருக்கிறார்.

சிறுவயதிலேயே விண்வெளிக்குறித்த தெளிவான புரிதல் சிறுவனுக்கு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் லோனோஸ்பேரில் உள்ள Institute of Terrestrial Magnetism மற்றும் Russian Academy of Sciences உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னதாக போரிஸை ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வுக்காக அவரது ஆரா-வை புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இறுதியாக போரிஸிடம் வழக்கத்துக்கு மாறான அதிர்வுகள் (vibes) இருப்பதாக கூறியுள்ளனர்.

கதையில் முக்கியமான ட்விஸ்ட் என்னவென்றால் தற்போது அந்த தாயும் மகனும் காணவில்லை என டெய்லி ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அவர்கள் ரஷ்யாவின் பாதுகாப்பில் யாருக்கும் தெரியாத கிராமத்தில் வாழ்ந்து வருவதாக சிலர் கூறுகின்றனர்.