கிறிஸ்ட்சர்ச்சின் தென்கிழக்கே உள்ள Banks Peninsula வில் Akaroa என்ற இடத்தில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கோடீஸ்வரர் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் இதுவரை தேடப்படாத பகுதிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

கிரஹாம் வான்ஸ்டோன் என்ற குறித்த கோடீஸ்வரர் 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி அன்று Akaroa வில் உள்ள அவரது மலைப்பகுதி வீட்டிலிருந்து காணாமல் போனார்.

49 வயதில் அவர் காணமல் போனது இயல்புக்கு அப்பாற்பட்டது, மேலும் அவர் மிகவும் நேசிக்கப்பட்ட குடும்ப உறுப்பினராகவும் சமூகத்தில் நன்கு மதிக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.

தற்போது ஒரு புதிய விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மற்றும் இன்று காலை தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் முன்பு ஆய்வு செய்யப்படாத Akaroa பகுதிக்கு தங்கள் விசாரணையை கொண்டு சென்றனர் என்று ஒரு போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 "வான்ஸ்டோன் காணாமல் போனதில் இருந்து போலீசார் பல விசாரணைகளை மேற்கொண்டனர், ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.

திரு வான்ஸ்டோனின் வழக்கில் தீர்வைப் பெற உதவக் கூடிய
தகவல்கள் உள்ளவர்கள் முன்வருமாறு காவல்துறை ஊக்குவிக்கிறது.

இந்த வழக்கைத் தீர்க்க எங்களுக்கு உதவக்கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என காவல்துறை கூறுகிறது.

தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் பொலிஸைத் தொடர்புகொள்ளவும் அல்லது https://www.police.govt.nz/use-105 இல் உள்ள "updat emy report section" வழியாகவும், கோப்பு எண் 990906/8117ஐக் குறிப்பிட்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது Stuff இணையதளத்தில் வெளியான செய்தி.