ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக மேலும் 114 வெலிங்டன் பேருந்து பயணங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

கடந்த அக்டோபர் மாதம் 67 வெலிங்டன் பேருந்து பயணங்கள் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது வெலிங்டன் நகரத்தில் 80 பேருந்து பயணங்களையும் Porirua வில் 34 பேருந்து பயணங்களையும் இடைநிறுத்தம் செய்வதாக மெட்லிங்க் தெரிவித்துள்ளது.

மேலும் பேருந்து கால அட்டவணையை முழுமையாக இயக்குவதற்கு இன்னும் 120 ஓட்டுநர்கள் குறைவாக உள்ளதாக மெட்லிங்க் கூறியது.

பேருந்து இடைநிறுத்தங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைச் சரிபார்க்க, புறப்படுவதற்கு முன்னதாக, இணையதளம் அல்லது செயலி மூலம் தங்கள் பயணத்தைச் சரிபார்க்க பயணிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

ஆக்லாந்து டிரான்ஸ்போர்ட் கடந்த மாதம் 800 க்கும் மேற்பட்ட பேருந்து பயணங்களை பிராந்தியம் முழுவதும் அதன் தினசரி கால அட்டவணையில் இருந்து நீக்குவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.