West Coast நகரமான Hokitika வில் MDMA போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அடுத்த வாரம் Greymouth மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்நிலையில் Hokitika மற்றும் West Coast இன் பிற பகுதிகளில் MDMA போதைப்பொருள் மற்றும் பிற போதைப்பொருள்கள் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கிர்ஸ்டன் நார்டன் தெரிவித்தார்.