ஏர் நியூசிலாந்து விமானத்தில் இன்ஜின் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை ஏர் நியூசிலாந்து உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று மதியம் Blenheim இல் இருந்து ஆக்லாந்திற்கு செல்லும் NZ5200 என்ற விமானத்தின் கேப்டன் ஆக்லாந்தை நெருங்கும்போது வலது கை பக்கம் இருந்து எஞ்சினில் தீடீரென தீப்பொறிகள் தோன்றியதை கவனித்ததாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதையடுத்து அவசர சேவைகள் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறங்கினர்.

இதனையடுத்து விமானம் சேவைக்குத் திரும்புவதற்கு முன் பொறியாளர்களால் ஆய்வு செய்யப்படும் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.