அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகள் டிப்பனி டிரம்ப்(29) தனது காதலர் மைக்கேல் பவுலோஸை(25) ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி மார்லா மேப்பில்சின் மகள் தான் டிப்பனி டிரம்ப்.

இந்நிலையில் இந்த திருமணம் புளோரிடாவின் பாம் பீச்சில் திருமணம் நடந்தது.

இந்த விழாவில் டிரம்பின் முன்னாள் மனைவியும் கலந்து கொண்டார்.

டிப்பனி டிரம்ப் விடுமுறைக்காக லண்டன் சென்றிருந்தபோது, அங்கு முதன்முறையாக பவுலோஸை சந்தித்தார்.

மைக்கேல் பவுலோஸ் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக் கொண்டிருந்தார்.

இவர் லெபனான் நாட்டை சேர்ந்த செல்வந்தர் குடும்ப வாரிசு ஆவார்.கடந்தாண்டு ஜனவரியில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.