எலான் மஸ்க்,  கூறிய ஒரே ஒரு வார்த்தையால் ட்விட்டர் பணியாளர் உடனடியாக அலுவலகத்தில் வாந்தி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு, அந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் முடுக்கிவிட்டார்.

மொத்தம் ட்விட்டரின் 7,500 பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ட்விட்டரின் பொறியாளர்களின் மேலாளர் ஒருவரிடம், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை எலான் மஸ்க்கின் உதவியாளர்கள் கூறியுள்ளனர். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பணியாளர், திடீரென அலுவலகத்தில் இருந்த குப்பை தொட்டி ஒன்றில், வாந்தி எடுத்ததாக அங்கிருந்தவர்கள் ஊடங்களிடம் தெரிவித்துள்ளனர்.

எலான் மஸ்க் கொடுத்த கடினமான பணிகள் அனைத்தையும் முடித்து, அலுவலகத்திலேயே தூங்கிய காரணத்தால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

அந்த சமயத்தில், திடீரென அதிர்ச்சி செய்தியை கேட்டவுடன் வாந்தி எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிநீக்க நடவடிக்கை பணியாளர்களை எந்தளவிற்கு பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது என்பதற்கும், எலான் மஸ்க் ட்விட்டரில் செய்துவரும் அதிரடிகளின் விளைவுகளுக்கும் உதாரணமாக அமைகிறது.