குற்றங்களை தடுக்கும் நியூசிலாந்து காவல்துறையின் 'Operation Cobalt' நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள துப்பாக்கிகள், வாகனங்கள், போதைப்பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை Palmerston North பகுதியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நவம்பர் 8 ஆம் திகதி Palmerston North மற்றும் ஆக்லாந்தில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையின் பின்னர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஹார்லி டேவிட்சன், ஆடி, ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ மற்றும் ஃபோர்டு ராப்டர் ஆகியவை அடங்கும்.

மேலும் சுமார் 560,000 டொலர்கள் பணம் மீட்கப்பட்டதுடன் 9 கிலோ மெத்தாம்பேட்டமைனும் கைப்பற்றப்பட்டது.

அதன் தெரு மதிப்பு
1.6 மில்லியன் டொலர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ஏழு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன.

மத்திய மாவட்டக் களக் குற்றவியல் மேலாளர் துப்பறியும் இன்ஸ்பெக்டர் பால் பாஸ்கெட் கூறுகையில்‌..

"ஆபரேஷன் கோபால்ட் இவ்வாறான சட்டவிரோத நடத்தைகளை குறிவைத்து சீர்குலைக்கும்" என்று கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32, 36, 45 மற்றும் 55 வயதுடைய நான்கு ஆண்களும், 31 மற்றும் 32 வயதுடைய இரண்டு பெண்களும் Palmerston North மாவட்ட நீதிமன்றத்தில் டிசம்பர் 2ஆம் திகதி ஆஜர்படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.