Manawatū வில் இயங்கி வரும் இறைச்சி தொழிற்சாலையில் கடந்த ஆண்டு, உணவு பேக்கிங் இயந்திரத்தை இயக்கும் போது அதில் சிக்குண்டு ஊழியர் ஒருவர் இறந்ததையடுத்து, குறித்த தொழிற்சாலைக்கு 350,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், 47 வயதான டுவைன் சம்மர்ஸ் என்ற நபர் Kakariki Proteins Limited நிறுவனத்தில் உணவு பேக்கிங் இயந்திரத்தை இயக்கும் போது அதில் சிக்குண்டு உயிரிழந்தார்.

WorkSafe இந்த சம்பவத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட இயந்திரம் அந்த இடத்தில் நிறுவப்பட்ட மற்றொரு இயந்திரத்தின் பிரதியாக இருப்பதைக் கண்டறிந்தது.

இந்த மாற்றம் தான் மரணத்திற்கு வழிவகுத்தது என WorkSafe இன்று தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் இயந்திரத்தின் பிரதி மீது போதுமான இடர் மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை, இயந்திரத்தை சரியாகப் பயன்படுத்த அதன் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கத் தவறியது மற்றும் அவர்களை போதுமான அளவில் மேற்பார்வை செய்யவில்லை என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.

அவசரகாலத்தில் இயந்திரத்தை விரைவாக நிறுத்துவதற்கு எளிதில் அணுகக்கூடிய பூட்டக்கூடிய சுவிட்சும் குறித்த இயந்திரத்தில் காணப்படவில்லை.

இந்நிலையில் Kakariki Proteins Limited நிறுவனத்திற்கு அதன் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக இன்று காலை Palmerston North மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக $
350,000 டொலர்கள் மற்றும் 130,000 டொலர்கள் அபராதம் செலுத்த நீதிமன்றம் குறித்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

மேலும் புதிய உபகரணங்களை நிறுவும் போது ஏற்படும் அபாயங்களைக் கண்டறிவது நிறுவனங்களின் பொறுப்பு என்று WorkSafe இன் பகுதி விசாரணை மேலாளர் Paul West கூறினார்.