தெற்கு பசிபிக் பெருங்கடலில் டோங்கா என்ற தீவு நாடு அமைந்துள்ளது.

இந்த தீவில் நேற்றைய தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

டோங்கா நாட்டின் தலைநகரான நுகுஅலோஃபாவில் இருந்து சுமார் 211 கி.மீ. தூரத்தில் பசிபிக் பெருங்கடலில் சுமார் 24.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

இதையடுத்து டோங்கா தீவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.