சிறுநீரக கல் அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒருவர் தனது சிறுநீரகத்தை காணவில்லை என புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தை‌  53 வயதான சுரேஷ் சந்திரா என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார்

இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அதனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அவருக்கு, சிறுநீரக கல் நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின், அவர் வீட்டில் ஓய்வில் இருந்தபோது, அவருக்கு வயிற்றுக்கடியில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது‌ அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

பரிசோதனையில், அவரின் ஒரு கிட்னியை காணவில்லை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவர் புகார் அளித்த நிலையில், இதுவரை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

இதுகுறித்து சுரேஷ் கூறுகையில்,

இந்த சம்பவம் தொடர்பில் மருத்துவமனையை தொடர்புகொண்டபோது, அவர்கள் உரிய பதில் ஏதும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரை தனக்கு அடையாளம் காண முடியவில்லை என்றும் அப்போது தனக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.