ஆக்லாந்து புறநகர்ப் பகுதியான Beachlands இல் உள்ள கடற்கரையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் கடற்கரையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சடலத்தை முறையாக அடையாளம் காணும் வரை எந்த தகவலும் வழங்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.