நியூசிலாந்தின் இரண்டு வார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 4600 பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்களுடன் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த மெஜஸ்டிக் பிரின்ஸஸ் சொகுசு கப்பலில் 800 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த கப்பல் சிட்னி நகரை சென்றடைந்த நிலையில் கப்பலில் பயணித்த அனைவருக்கும் வழமையான கொவிட்‌ பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மிக லேசான கொவிட் அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதுடன் ஏனைய பயணிகளை கப்பலில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் இவர்களை சில நாள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பல் ஆக்லாந்து, வெலிங்டன், டனீடின்,  Bay of Islands மற்றும் Fiordland தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள துறைமுகங்களில் நங்கூரமிட்டு இருந்ததுடன் நியூசிலாந்தில் 12 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவுஸ்திரேலியா திரும்பியை குறிப்பிடத்தக்கது.