ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஸ்ரீஹரன் மற்றும் ஆர்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தற்போது பரோலில் வெளியே வந்துள்ள நளினி, சென்னை உயர்நீதிமன்றம் தனது மனுவை நிராகரித்ததையடுத்து, சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த மற்றொரு குற்றவாளியான ஏஜி பேரறிவாளனை, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ன் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த மே 18ஆம் திகதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நளினியின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பேரறிவாளனின் வழக்கை மேற்கோள் காட்டி நளினி இதேபோன்ற நிவாரணம் கோரியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலால் கொல்லப்பட்டார்.