கனடாவில் எலான் மஸ்கிற்கு வெள்ளியால் சிலை வைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கனடாவின் சிறப்புக் கலைஞர்களான கெவின் மற்றும் மிச்செல் ஸ்டோன் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.

எலான் மஸ்கை கௌரவிக்கும் விதமாக இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 40 அடி உயரம் உள்ள இந்த சிலையின் மதிப்பு ரூ.4.9 கோடியாகும்.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை கையிலெடுத்ததிலிருந்து எலான் மஸ்க் தற்போது வரை பரவலாக பேசப்பட்டு வருகிறார்.

இதற்கு முன்னர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் பல புதிய சாதனைகளை செய்திருந்தாலும், டிவிட்டரை வாங்குவதில் ஏற்பட்ட சர்ச்சைகள் இவர் மீது அனைவரின் கவனத்தையும் குவியச் செய்தது.

இந்நிலையில் தற்போது இவரது ரசிகர்கள் இவருக்கு வெள்ளி சிலையை செய்து இவரை மேலும் பிரபலமானவராக ஆக்கியுள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சாதனைகளை நினைவுகூரும் விதமாக இந்த வெள்ளி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மஸ்க்கின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளதாக கூறியுள்ளனர். இந்த சிற்பத்தில் எலான் மஸ்கின் தலை மட்டும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது கிரிப்டோகரன்சியின் லோகோவை போன்று இந்த தலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இது எலான் மஸ்க் கவனத்திற்கு சென்றால் இதனை அவர் வாங்கலாம் என்று சொல்லப்படுகிறது. சிலர் இது எலானுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர்.

எப்படியாயினும் இந்த சிலையை வடிவமைத்தவர்களின் கலை திறனை பாராட்டாமல் இருக்க முடியாது என டிவிட்டரில் இந்த சிலை பகிர்ந்து பயனர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.