நிமோனியாவால் பாதிக்கப்பட்ட தன் மகளுடன் ஒரு பெண் பூட்டப்பட்ட மருத்துவமனைக்கு வெளியே ஒரு சிறிய கட்டிடத்தில் மூன்று மணிநேரம் காக்க வைக்கப்பட்டு பின்னர் டனீடின் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் தனது மகளை அனுமதித்த சம்பவம் Queenstown இல் இடம்பெற்றுள்ளது.

தனது 18 வயது மகள் அக்டோபர் 25 ஆம் திகதி இரவு குளிரில்  மூச்சுவிட சிரமப்படுவதைப் பார்த்தது தனது வாழ்க்கையின் மோசமான தருணங்களில் ஒன்றாகும் என்று அவரது தாய் சுனிதா கருணாகரன் கூறினார்.

தனியாருக்குச் சொந்தமான Queenstown மருத்துவ மையத்தில் ரத்தப் பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே தன் மகளின் உடல்நிலை தீவிரம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் தனக்கு அறிவுறுத்தியதாக சுனிதா கூறினார்.

இருப்பினும், அவர்கள் அவளை வெளிப்புற கட்டிடத்தில் வைத்தனர், அதில் ஒரு படுக்கை மற்றும் சிறிய சமையலறை இருந்தது‌.

இருட்டாக இருந்தாலும், தேவைப்பட்டால் வெளியே உள்ள கழிப்பறையைப் பயன்படுத்தச் சொன்னார்கள்.

மகளின் உடல்நிலை மோசமடைந்ததால், பூட்டிய மருத்துவமனைக்கு வெளியே பஸ்ஸரைப் பயன்படுத்தி மருத்துவமனை ஊழியர்களை அழைத்த போது அவர்கள் அதை புறக்கணித்ததாக சுனிதா கூறினார்.

மற்றொரு குழந்தை வீட்டில் தனியாக இருப்பதால், விரைவில் மருத்துவரை சந்திப்பார்கள் என்று எந்த அறிகுறியும் இல்லாததால், தானும் தன் மகளும் இரவு 11 மணியளவில் மருத்துவமனையை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார்.

"என் பெண் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதைப் பார்த்து இரவு முழுவதும் நான் முற்றிலும் உதவியற்றவளாக உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.

மறுநாள் காலை Queenstown மெடிக்கல் சென்டரில் உள்ள ஊழியர்கள், மகளை, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவளது ஆக்சிஜன் அளவு 20% ஆகக் குறைந்தது, அவளுக்கு 38.7C காய்ச்சல் இருந்தது மற்றும் கட்டுப்படுத்த முடியாத இருமல் இருந்தது.

பின்னர் அவள் ஒரு ஒடாகோ மீட்பு ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு டனீடின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாள்.

அங்கு அவளுக்கு இரண்டு நுரையீரல்களையும் பாதிக்கும் பாக்டீரியா ஸ்ட்ரெப் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் மூன்று நாட்கள் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டாள்.

நிலையாக மாறியவுடன், அந்த வாரம் முழுவதும் பொது வார்டுக்கு மாற்றப்பட்டாள்.

"அன்றிரவு மருத்துவமனை ஊழியர்கள் எங்களைப் பார்த்திருந்தால், என் மகள் தனது உயிரை இழக்கும் அளவிற்கு அவதிப்பட்டிருக்க மாட்டாள்." என அவர் தெரிவித்தார்.

"அவர்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் இல்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அவர்கள் முரட்டுத்தனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை," என்று அவர் கூறினார்.

“அவள் மூச்சுவிட சிரமப்படுகிறாள் என்று நான் பலமுறை மணியை அடித்தபோது, ​​அவர்கள் எங்களைப் புறக்கணித்தார்கள்.  அதுதான் கடினமான பகுதி."

நோயாளிகள் ஆம்புலன்சில் வந்ததால் நாங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள் என்று அவர் கூறினார்.

மற்ற நோயாளிகள் காரில் வருவதையும் அந்த நேரத்தில் காத்திருப்பு அறைக்கு அனுமதி வழங்கப்படுவதையும் அவர் பார்த்தார்.

"நான் நம்பிக்கையற்ற மற்றும் உதவியற்றவளாக உணர்ந்தேன்" 

டனீடின் மருத்துவமனையில் பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மகள் அனுமதிக்கப்பட்ட அறைக்கு உள்ளேயும் வெளியேயும் ஓடுவதைப் பார்ப்பது அச்சுறுத்தலாகவும் பயமாகவும் இருந்தது.

"அன்று நான் அனுபவித்ததை வேரு யாரும் கடந்து செல்வதை நான் விரும்பவில்லை."

"நான் ஒரு சிறந்த வாழ்க்கைக்காக நியூசிலாந்துக்கு வந்தேன், நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பணிகளைச் செய்து வருகிறேன்.

"மருத்துவப் பகுதியில் மனிதநேயம் இல்லை என்பதைப் பார்ப்பது மிகவும் வேதனை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.