சீனா அமைத்துள்ள தனது பிரத்தியேக டியாங்காங் விண்வெளி மையத்திற்கு குரங்குகளை ஆய்வுக்காக அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விண்வெளியில் இந்த உயிரினங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள இந்த திட்டத்தை அந்நாடு செயல்படுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக விண்வெளியில் குரங்குகள் இனப்பெருக்கத்தை மேற்கொண்டால் என்ன ஆகும்? என்பதை கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் உலகம் அழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அருகில் உள்ள கிரகங்களை காலனிபடுத்தும் பணியை பல நாடுகளும் தொடங்கியுள்ளன.

இவ்வாறான முயற்சியில் விண்வெளியில் மனிதர்கள் ஆண்டு கணக்கில் தங்க நேரலாம். இக்காலகட்டங்களில் இனப்பெருக்கம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம்.

எனவே புவியீர்ப்பு பூஜ்யமாக இருக்கும் பகுதியில் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்வது சாத்தியமா? என்பதை கண்டறிய சீனா குரங்குகளை விண்வெளிக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' எனும் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது. சீனாவின் மூத்த விஞ்ஞானியான ஜாங் லு இதனை உறுதி செய்திருப்பதாகவும் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இனப்பெருக்க நோக்கத்திற்காக தற்போது வரை மீன்கள், நத்தைகள் போன்ற உயிரினங்கள்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இதனையடுத்து தற்போது குரங்குகள் அனுப்பப்பட உள்ளன. இதேபோல சோவியத் யூனியன் காலத்தில் இனப்பெருக்க நோக்கத்திற்காக 18 நாட்கள் எலிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன.

ஆனால் அவை திரும்ப பூமிக்கு வந்த பின்னர் இனப்பெருக்க முயற்சியில் ஈடுபட்டாலும் புதிய குட்டிகள் பிறக்கவில்லை.

எனவே விண்வெளியில் இனப்பெருக்கம் செய்யும்போது ஏற்படும் மாற்றம் என்ன என்பது குறித்து அறிவியல் உலகம் நீண்ட நாட்களாக ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆய்வில் ஒரு பகுதியாகவே குரங்கை சீனா விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது.

ஆனால் இதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதாவது, விண்வெளியில் இந்த குரங்குகளுக்கு உணவளிப்பதிலும், குரங்கின் கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் பிரச்னை இருப்பதால் இது இனப்பெருக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்து