இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் அல்லது இரத்த நிலவு நியூசிலாந்து வானத்தில் இருந்து இன்று இரவு தோன்றவுள்ளது.

இன்று இரவு 11.15 மணி முதல் சந்திர கிரகணம் சந்திரனை சிவப்பு நிறமாக மாற்றும்.

இது சுமார் 85 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

பூமியின் நிழலில் சந்திரன் பயணிக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சந்திரன் ஒரு பகுதி மட்டுமே பூமியின் நிழலில் வந்தால், அது ஒரு பகுதி கிரகணம் என்று அழைக்கப்படும்.

முழு கிரகணத்தில், சந்திரன் முழுமையாக பூமியின் நிழலில் மூழ்கி, சிவப்பு/ஆரஞ்சு நிற ஒளியைப் பெறுகிறது.

ஆனால் சந்திர கிரகணத்தை பார்ப்பது வானிலையை சார்ந்தது.

மேலும் நியூசிலாந்தின் சில பகுதிகளில் இதை தெளிவாக பார்க்க முடியாது.

ஆக்லாந்து மற்றும் நார்த்லாண்டில் வானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்‌ என கூறப்படுகிறது.

Canterbury இற்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகாடோ, Canterbury, ஒடாகோ மற்றும் Southland இல் மேகமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மெட் சர்வீஸ் தெரிவித்துள்ளது.

Gisborne, Hawke's Bay, Waitomo to Wellington, Marlborough, Nelson, Buller மற்றும் Westland இல் இந்த கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும்.

இருப்பினும், பார்க்க முடியாத அளவுக்கு மேகமூட்டமாக இருந்தால், NASA ஆன்லைனில் நேரடி ஸ்ட்ரீம் இல் பார்வையிட முடியும் என கூறப்பட்டுள்ளது.