எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நியூசிலாந்து வெலிங்டனில் நடைப்பெற உள்ள AOTEAROA NZ PEDERADION OF TAMIL SANGAM  ஏற்பாடு செய்துள்ள தமிழ் மாநாடு நிகழ்ச்சியில் பேச்சாளராக பங்கேற்க இலங்கையை பிறப்பிடமாக கொண்ட புகழ் பெற்ற தமிழ் அறிவிப்பாளரும், வானொலி, மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகருமான B. H அப்துல் ஹமித் இன்று (08)ஆக்லாந்து விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவரை விமான நிலையத்தில் யுகேந்திரன் வாசுதேவன் ( மலேசியா வாசுதேவனின் மகன்), ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் தலைவர் வை. ரவீந்திரன் , கலைஞரும் சமூக சேவையாளருமான திரு அற்புத சிங்கம் மற்றும் பலர் நேரில் சென்று வரவேற்றனர்.

அவ்வகையில் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற வருகை தந்திருக்கும் B. H அப்துல் ஹமீத் அவர்களை அன்புடன் வரவேற்பதுடன் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது அரசன் நியூசிலாந்து மற்றும் CTV தமிழ்.