ட்விட்டர் நிறுவன ஊழியர்களிடம் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

உலகின் மிகவும் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் கைப்பற்றியதை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.

மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவன ஊழியர்களிடம் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது...

ட்விட்டரில் முன்பு பணியாற்றியவர்கள் மற்றும் இப்போதும் பணியாற்றுபவர்கள், வலிமையான மற்றும் நெகிழ்ச்சியானவர்கள்.

எவ்வளவு கடினமான தருணத்திலும் அவர்கள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள்.

பலர் என் மீது கோபமாக இருப்பதை நான் உணர்கிறேன். இந்த நிலைமை ஏற்பட்டதற்கு நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.

அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ட்விட்டரில் இதுவரை பணியாற்றிய அனைவருக்கும் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.