வைகாடோவில் Ngāruawāhia என்ற இடத்தில் வீடொன்று தீப்பிடித்ததை அடுத்து குறித்த வீட்டில் இருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.40 மணியளவில் Sims தெருவில் அமைந்துள்ள குறித்த வீட்டில் தீப்பிடித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.
வீட்டில் ஒரே ஒரு நபர் காணப்பட்ட நிலையில் மீட்புப் படையினர் அவரை அடைவதற்குள் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதை தீயணைப்பு மற்றும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது வீடு சுற்றி வளைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.