நடைபெறவுள்ள ஹமில்டன்‌ வெஸ்ட் இடைத்தேர்தலில் தேசிய கட்சியின் வேட்பாளராக Tama Potaka தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tama Potaka தற்போது Ngāi Tai ki Tamaki இன் தலைமை நிர்வாகியாக உள்ளார். 

அவர் NZ சூப்பர் ஃபண்டின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் ஹமில்டனை தளமாகக் கொண்ட Tainui Group Holdings இன் பொது மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.

"ஹமில்டன் வெஸ்ட் இடைத்தேர்தலில் தேசிய வேட்பாளராக போட்டியிட உள்ளூர் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று Tama Potaka ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிட தொழிற்கட்சி அதன் வேட்பாளராக கல்விச் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஜோர்ஜி டான்சியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இதனிடையே வேட்புமனு தாக்கல் நவம்பர் 8 ஆம் திகதி நண்பகலுடன் முடிவடைய உள்ள நிலையில் ஹமில்டன் வெஸ்ட் இடைத்தேர்தல் டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.