தெற்கு ஆக்லாந்தில் உள்ள Weymouth என்ற இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.

நேற்றிரவு சுமார் 10.10 மணியளவில் Weymouth குடியிருப்பு பகுதிக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஒரு நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவர்கள் தெரிவித்தனர்

குற்றவாளியை கண்டுபிடித்து, சம்பவத்தின் சூழ்நிலையை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்