Palmerston North பகுதியில் கால்நடை கருணைக்கொலை மருந்துகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொலிஸார் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறையின் ஒரு அறிக்கையில், விலங்குகளை கருணைக்கொலை செய்ய பயன்படுத்தப்படும் பென்டோபார்பிடோன் என்ற மருந்து புதன்கிழமை Palmerston North பகுதியில் இருந்த ஒரு வாகனத்தில் இருந்து திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மருந்து அதிக ஆபத்துள்ள பொருள் எனவும், உட்கொண்டால் உயிரிழக்க நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எவரேனும் கைவிடப்பட்ட மருந்து பாட்டில்களைக் கண்டால் உடனடியாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

நவம்பர் 2 புதன்கிழமை இரவு 10 மணி முதல் நவம்பர் 3 வியாழன் காலை 7.30 மணி வரை Roslyn பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டவர்கள் யாரேனும் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு 221103/0923 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.