இன்று காலை Northland இல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு நபர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

காலை 7.22 மணியளவில் Mitimiti இல் உள்ள West Coast‌ வீதியில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் போது சாலை சிறிது நேரம் மூடப்படும் என்றும், வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தினர்.

சம்பவ இடத்தில் தீவிர விபத்து பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.