அமெரிக்காவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஜோ பைடன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

குளிர்கால வெப்பச் செலவுகளை குறைப்பதற்காக இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, 13.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித வள சேவைப்பிரிவு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது.

குளிர் காலத்தில் வீடுகளை வெப்பமாக்குவதற்கான கட்டணம் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 28 வீதம் வரை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 90 வீதமான குடும்பங்கள், குளிர் காலத்தில் வெப்பத்தை பெற்றுக் கொள்வதற்காக இயற்கை எரிவாயு அல்லது மின்சாரத்தை நம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.