ஏர் நியூசிலாந்தின் புதிய Airbus A321neo விமானங்களின் முதலாவது விமானம் ‌நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்த விமானம் ஆக்லாந்து, வெலிங்டன், கிறிஸ்ட்சர்ச், குயின்ஸ்டவுன் மற்றும் டன்னீடன் இடையே உள்ள உள்நாட்டு வழித்தடங்களில் பயன்படுத்தப்படும்.

ஏர் நியூசிலாந்தின் உள்நாட்டு A320 விமானங்களில் 171 இருக்கைகள் உள்ள நிலையில் அந்த விமானத்தை விட 50 இருக்கைகள் A321 விமானத்தில் அதிகமாக உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மேலும் மூன்று விமானங்கள் நியூசிலாந்திற்கு வருகை தர உள்ள நிலையில் 2026 இல் மேலும் இரண்டு விமானங்கள் வரும் என கூறப்பட்டுள்ளது.