கிறிஸ்ட்சர்ச்சின் வடக்கே Pegasus கடற்கரைக்கு அருகில் நேற்றைய தினம் ஏற்பட்ட காட்டுத் தீயை அடுத்து குறித்த பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த தீ பரவல் இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்ததால் ஏற்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

இதுவரை 160 ஹெக்டேர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ள நிலையில் பைன் மரங்களும் தீக்கிரையாகி உள்ளன.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் இரண்டு இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் இளைஞர் உதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் இருந்து இரவில் வெளியேற்றப்பட்ட 130 பேர் இன்று மாலை வீடு திரும்ப முடியும் என்று தீயணைப்பு மற்றும் அவசரநிலை சேவைகள் கூறியது.

சம்பவக் கட்டுப்பாட்டாளர் டேவ் பெர்ரி கூறுகையில்..

குடியிருப்பாளர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பிச் செல்லும் அளவுக்கு நிலைமை பாதுகாப்பாக உள்ளது. ஆனால் நிலைமைகள் மாறினால் அவர்கள் மீண்டும் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

"சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நபர்களை விரைவாக அடையாளம் காண முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கேன்டர்பரி ரூரல் ஏரியா கமாண்டர் இன்ஸ்பெக்டர் பீட்டர் கூப்பர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"இந்த சீசனில் பட்டாசு வெடிக்க விரும்பும் எவரும் அதை பாதுகாப்பாகச் செய்யுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்"

"காற்று வீசும் இடங்கள், உலர்ந்த புல் அல்லது இலைகள் போன்ற தீப்பிடிக்கக்கூடிய எதையும் சுற்றி அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது" என அவர் தெரிவித்தார்.