நடிகை ஹன்சிகா தனது சமூக வலைதள பக்கத்தில் வருங்கால கணவரை அறிமுகம் செய்துள்ளார்.

அதன்படி தொழிலதிபரான சோஹேல் கதுரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்யவுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களைப் ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் ஹன்சிகாவிடம் ப்ரொபோஸ் செய்கிறார் சோஹேல் கதுரியா.

அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஹன்சிகா என்றென்றும் அன்புடன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் திருமணம் டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் ஹன்சிகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.