ஆக்லாந்து பெண் ஒருவர் ரஷ்ய போராளிகளுக்கு நன்கொடை வழங்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்டோனினா ஓவ்சினிகோவா என்ற குறித்த பெண் உக்ரைன் மீது படையெடுக்கும் ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவாக நன்கொடைகள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் 1.5 மில்லியன் ரூபிள் (நியூசிலாந்து மதிப்பில் 43,000 டொலர்கள்) திரட்டியதை ஸ்டஃப் செய்திக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய வீரர்களுக்கான ஃபிளாக் ஜாக்கெட்டுகள், துப்பாக்கி மற்றும் ட்ரோன்கள் போன்ற பொருட்களுக்கு இந்த பணம் செல்லும் என கூறப்படுகிறது.

இது தொடர்பில் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் சட்டத்தின் கீழ், நியூசிலாந்தர்கள் இவ்வாறு ‌சேவைகள் மற்றும் நிதிகளை வழங்குவது சட்டவிரோதமானது.

ரஷ்யாவில் உள்ள கிட்டத்தட்ட 20 வங்கிகள் ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் பதிவேட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.