இரண்டு புதிய சுமத்ரன் புலிகள் இனவிருத்திக்காக ஜோடியாக விரைவில் ஆக்லாந்து மிருகக்காட்சிசாலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அமெரிக்காவில் இருந்து இன்று காலை இந்த ஜோடிப் புலிகள் ஆக்லாந்திற்கு வந்ததாக மிருகக்காட்சிசாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வயதான ராமா என்ற புலி Oklahoma நகர மிருகக்காட்சிசாலையில் இருந்தும், 4 வயது ஜயானா என்ற புலி Kansas இல் உள்ள Topeka உயிரியல் பூங்கா மற்றும் பாதுகாப்பு மையத்திலிருந்தும் வந்துள்ளது.

மிருகக்காட்சிசாலையில் இரண்டு புலிகளும் சுதந்திரமாக சுற்றுவதற்கு முன், கட்டாய 30 நாள் தனிமைப்படுத்தல் காலம் தற்போது தொடங்கியுள்ளது.

ஆக்லாந்து உயிரியல் பூங்காவின் பாலூட்டிகளின் கண்காணிப்பாளர் வாரன் ஸ்பென்சர், மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கு இது "உண்மையில் உற்சாகமான நாள்" என்று கூறினார்.

இந்த ஜோடிப் புலிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹமில்டன் மிருகக்காட்சிசாலையில் இருந்து ஆக்லாந்து மிருகக்காட்சி சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 14 வயது சுமத்ரன் புலியான சாலியுடன் இணைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.