நிவர் புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்துவருவதால கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டை வெள்ளநீர் சூழ்ந்த வீடியோ வெளியாகி உள்ளது.

 

அதன்படி வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று (25) மாலை தமிழகத்தின் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளது.

 

புயல் கரையைக் கடக்கும்போது ஆருகில் உள்ள பகுதிகளில் பலத்த காற்றானது 120-130 கி.மீ வேகத்திலும் சில சமயங்களில் 145 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் ,நிவர் புயல் காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை முதலே கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து வருகிறது. வெள்ள நீரால் பாதிக்கப்படும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி நிவாண முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.