இங்கிலாந்தில் இயங்கி வரும் டெலிவரோ (Deliveroo) என்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு வந்த மெசேஞ் ட்விட்டரில் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
லியம் பாக்னல் என்பவர் 'டெலிவரோ' நிறுவனத்தின் டெலிவரி முகவரிடம் பேசிய மெசேஞ் ஸ்கிரீன்ஷாட்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், அந்த டெலிவரி முகவர், வாடிக்கையாளரான பாக்னலை தொடர்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
உடனே, பாக்னல் மெசேஞ் வழியாகவே ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு அந்த முகவர் அளித்த பதில்தான் வேடிக்கையின் உச்சம்.
"நீங்கள் ஆர்டர் போட்ட உணவு அருமையாக இருந்தது. நான் அதை மொத்தமாக சாப்பிட்டுக்கொள்கிறேன். நீங்கள் டெலிவரோ நிறுவனத்திடம் புகார் அளித்துக்கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லியம்,"நீ ரொம்ப மோசம்" என அனுப்ப, அதற்கு "அதெல்லாம் வருதப்பட மாட்டேன்" என அந்த நபர் கூலாக பதிலளித்துள்ளார்.
இந்த ட்வீட் தற்போது பலராலும் பகிரப்பட்டும், கருத்து பதிவிடப்பட்டும் வருகிறது.
தொடர்ந்து இந்த ட்வீட்டை அடுத்து 'டெலிவரோ' நிறுவனம் இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், லியம் பாக்னலுக்கு உடனடியாக வேறு உணவு அளிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட டெலிவரி முகவரை அவர்கள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.