அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தைவானுக்கு பயணம் செய்து சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள நான்சி பெலோசியின் வீட்டில் நேற்று காலை ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.

சம்பவத்தின்போது நான்சி பெலோசி வீட்டில் இல்லை.

காயமடைந்த பால் பெலோசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவரை மருத்துவமனையில் அனுமதித்தவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்து தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.