Palmerston North இல் காவல்துறை ரோந்துக் காரின் மீது வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று பிற்பகல் 2.45 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

Tremaine மற்றும் Rangitikei தெரு சந்திப்பில் ஒரு வாகனம் போலீஸ் கார் மீது நேருக்கு நேர் மோதியது" என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

பொலிஸ் கார் மீது மோதிய வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாது சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பொலிஸ் அதிகாரி லேசான காயம் அடைந்தார், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து இடம்பெற்று ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர், பொலிஸார் அப்பகுதியில் மேற்கொண்ட விசாரணைகளில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Palmerston North மக்கள் Tremaine மற்றும் Rangitikei தெரு சந்திப்பை தவிர்த்து வேறு பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.