சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை கிரேன் மூலம் தூக்கி செல்கின்ற காணொளி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை எல்லாம் உலுக்கி கடும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்திய கொரோனா முதன் முதலாக சீனாவில் தான் கண்டறியப்பட்டது.

கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலவரத்தை சீனா மறைப்பதாக சில விமர்சனங்களும் எழுந்தது.

இதனிடையே கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜீரோ கொவிட் பாலிசி என்ற திட்டத்தை அமல்படுத்திய சீனா கொரோனா கட்டுப்பாடுகளை மிகக் கடுமையாக பின்பற்றியது.

நகரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும் ஒட்டு மொத்த நகர மக்களுக்கும் மாஸ் கொரோனா பரிசோதனை, தீவிர கட்டுப்பாடுகள் என பல்வேறு கெடுபிடிகளை விதித்தது.

இந்நிலையில் அங்கு கொரோனா பாதித்த நபர் ஒருவரை கிரேன் மூலமாக தூக்கி வேறு இடத்தில் வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.

கொரோனா பாதித்த நபரை தொடுவதால் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதால் இப்படி கிரேன் மூலமாக தூக்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.