நேற்று காலை ஆக்லாந்தின் Morningside என்ற இடத்தில் உள்ள பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் தேர்தல் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை 8.20 மணியளவில் New North வீதியில் அமைந்துள்ளது குறித்த அலுவலகத்தில் ஜன்னல் வழியாக ஒரு பொருள் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் Coatesville முகவரியில் உள்ள 57 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் பொலிஸார் தேடவில்லை என கூறப்படுகிறது.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தற்போது அண்டார்டிகாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.