ஆக்லாந்து புறநகர்ப் பகுதியான Māngere இல் இடம்பெற்ற சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடுதல் ஆணையை செயல்படுத்தியபோது 1 மில்லியன் மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் துப்பறியும் இன்ஸ்பெக்டர் லாயிட் ஷ்மிட் கூறுகையில்..

கடந்த வார இறுதியில் Māngere இல் ஆபரேஷன் கோபால்ட் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் தேடுதல் வாரண்ட்களை செயல்படுத்தி வந்தனர்.

செப்டம்பரின் பிற்பகுதியில் ஆக்லாந்து நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் Bader Drive என்ற முகவரியில் போதைப்பொருள் போன்ற பல சட்டவிரோத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என அவர் தெரிவித்தார்.

இதன்போது 1.1 மில்லியன் டொலருக்கும் அதிகமான  மெத்தாம்பேட்டமைனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கஞ்சா மற்றும் கிட்டத்தட்ட 8000 டொலர்கள் ரொக்கம் ஆகியவையும் குறித்த இடத்தில் கைப்பற்றப்பட்டன.

குறித்த முகவரியில் இருந்த 34 வயதான கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.