நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் லிட்ரோ தலைவர் முதித பெரேஸ் கூறுகையில்;
எதிர்வரும் வாரத்தில் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விநியோகஸ்தர்களுக்கு தற்போதைய விலையில் எரிவாயு கிடைக்காமல் போகும் நிலை காணப்படுவதாகவும் இதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய விலையில் எரிவாயுவை கொள்வனவு செய்யும் போது எதிர்வரும் வாரத்தில் எரிவாயு விலையை குறைத்தால் பாதகமாக அமையும் என கருதி விநியோகஸ்தர்கள் எரிவாயுவை சந்தைக்கு வெளியிடுவதில் தாமதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் எரிவாயு நிறுவனம் விநியோகத்தை குறைத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

எனினும் எரிவாயு விநியோகம் குறைக்கப்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.