ஆக்லாந்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய விசாரணையின் ஒரு பகுதியாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபரேஷன் கோபால்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்லாந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது Tec-9 சப்-மெஷின் துப்பாக்கி, பல வகையான வெடிமருந்துகள், சட்டவிரோத மருந்துகள் மற்றும் திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சிறிய GBL மற்றும் LSD (ஒரு வகை போதைப்பொருள்), சிறிய அளவிலான மெத்தாம்பேட்டமைன், கோகெயின் மற்றும் கஞ்சா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டனர்.

இந்நிலையில் இந்த சோதனை நடவடிக்கையில் Browns Bay இல் ஒரு முகவரியில் இருந்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதான குறித்த பெண்‌ North Shore மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அவர் மீது சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட துப்பாக்கி வைத்திருந்ததாகவும், சட்டவிரோதமாக வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

"ஆபரேஷன் கோபால்ட், சட்டவிரோத நடத்தைகளை குறிவைத்து சீர்குலைக்கும்" என்று டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் லாயிட் ஷ்மிட் கூறினார்.

கும்பல் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து குறிவைப்பார்கள் என்று ஷ்மிட் கூறினார்.

"எங்கள் விசாரணை தொடர்கிறது, மேலும் பல கைதுகள் இடம்பெறலாம்." என அவர் மேலும் தெரிவித்தார்.