இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் மாணவர்களுக்கான காலை உணவு இன்மை ஒரு முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

இந்த உணவு இன்மை பிரச்சினை காரணமாக வறுமை கோட்டின் கீழ் உள்ள பாடசாலை மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வறுமை காரணமாக காலை உணவு இன்றி பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பாடசாலையில் மயங்கி விழும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு காலை உணவு உண்ண வசதியில்லாத மாணவச்செல்வங்களுக்கு காலையுணவு வழங்கும் நிகழ்வு, புத்தளம் Focus 95 என்ற பழைய மாணவர் அமைப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் காலை உணவு உண்ண வசதி இல்லாத மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இத்தகைய மகத்தான தொண்டினை செய்து வரும் Focus 95 அமைப்பிற்கு CTV தமிழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.