இன்று மாலை முதல் வார இறுதி வரை South Island முழுவதும் கடும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tasman இல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 24 மணி நேரத்தில் Motueka இற்கு மேற்கே 170 மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Buller இல், வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் சனிக்கிழமை மாலை 3 மணி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதன்படி 150 மிமீ வரை மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Westland இல், இன்று இரவு Otira தெற்கிலிருந்து கனமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி 160 மிமீ வரை மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் நீரோடைகள் மற்றும் ஆறுகள் வேகமாக உயரக்கூடும் என்று MetService தெரிவித்துள்ளது.