ஆக்லாந்து நகரின் துணை மேயராக, Ōrākei Ward கவுன்சிலரான  டெஸ்லி சிம்ப்சனை ஆக்லாந்து மேயர் வெய்ன் பிரவுன் தெரிவு செய்துள்ளார்.

இன்று பிற்பகல் டெஸ்லி சிம்ப்சனின் இந்த நியமனத்தை மேயர் வெய்ன் பிரவுன் உறுதிப்படுத்தினார்.

ஊடகங்களிடம் பேசிய மேயர் பிரவுன்...

"டெஸ்லி ஆக்லாந்தின் முன்னோக்கு கொண்ட ஒரு பிராந்தியத் தலைவராக மிகவும் மதிக்கப்படுகிறார்"

"டெஸ்லியும் நானும் ஒரு சிறந்த அணியாக இருக்கப் போகிறோம்." என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த பதவியை ஏற்றுக்கொள்வது ஒரு பெரிய மரியாதை மற்றும் பாக்கியம் என்று சிம்சன் கூறினார்.

பிரவுனுடன் பணிபுரியும் வாய்ப்பு குறித்து தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் மாற்றத்திற்கான அவரது ஆணையை செயற்படுத்த உதவுவதோடு, அவர்களின் முன்னுரிமைகளை வழங்குவதற்கு அவர்களின் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் சிம்சன் தெரிவித்தார்.